● மணிகண்டன், கோவில்பட்டி.

தங்களிடம் வீடு மாற்றத்திற்காகவும், இரண்டு லட்சம் பணம் திரும்பக் கிடைக்க வும் பரிகாரம் கேட்டிருந்தேன். தங்களின் ஆலோசனைப்படி குபேர பத்ரகாளியம் மனை வணங்கி, அத்துடன் செவலூரும் போய்வந்தேன். போய் வந்த ஒரு மாதத்தில் வீடு மாற்றமும் ஏற்பட்டது. வரவேண்டிய பணமும் திரும்பக் கிடைத்துவிட்டது. யாருடைய உதவியும் இல்லாதபோது, தங்களுடைய ஆலோசனையும் பரிகார மும் நல்ல பலனைக் கொடுத்தது. நன்றி! எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. என்னுடைய வயிற்றில் பத்து செ.மீ. நீளத் தில் ஒரு மச்சம் பிறந்ததுமுதல் உள்ளது. இது மறைய என்ன பரிகாரம்?

Advertisment

உங்கள் ஜாதகத்தில் நாகதோஷம், களஸ்திர தோஷம் உண்டு. அத்துடன் ராகு தசையும் நடக்கிறது. அதனால் 40 வயதுவரை திருமணம் தடையாகும். காரைக்குடி சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு (செல்: 99942 74067) சூலினிதுர்க்கா ஹோமம், திருஷ்டிதுர்க்கா ஹோமம், காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமம் உள்பட 19 வகையான ஹோமம்செய்து, கலச அபிஷேகம் செய்துகொண்டால் 2019-ல் திருமணமும் நடக்கும். நல்ல அன்பான, அதிர்ஷ்டமான மனைவியும் அமைவார். ஹோமம் முடித்துவிட்டு நேரில் வந்தால் எந்தெந்த ஜாதகம் பொருந்தும், பொருந்தாது என்று ஒரு லிஸ்ட் தருவேன். வயிற்றிலுள்ள மச்சம் பற்றி அச்சம் வேண்டாம். அது யோக மச்சம்! குபேர பத்ரகாளியம்மனுக்கு நன்றிக்கடனாக ஒரு வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அல்லது செவ்வாய்க் கிழமை அபிஷேகம் செய்யுங்கள். பூசாரி குமார், செல்: 90253 29566-ல் பேசுங்கள். இந்த இரண்டு பரிகாரமும் உங்கள் எதிர்காலத்தை இனிமையாகவும் வளமையாகவும் ஆக்கும்.

● எஸ். சரவணன், சென்னை.

எங்களுக்கு சொந்த வீடு யோகம் எப்போது வரும்? வெளிநாட்டு யோகம் உண்டா? நான் மரவேலை செய்கிறவன். எதிர்காலம் எப்படியிருக்கும்?

சரவணன் திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி. 2021-ல் அட்டமச்சனி வரும்போது வெளிநாட்டு யோகம் அமையும். அதன்பிறகு 2023-க்குள் அட்டமச்சனி முடிவதற்குள் சொந்த வீட்டு யோகம் அமையும். மனைவி சங்கீதா விருச்சிக ராசி. 2021 வரை ஏழரைச்சனி. நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று வரவுக்குமேல் செலவும், வைத்திய சிகிச்சையும் வரலாம். மகள் தாரணி சுவாதி நட்சத்திரம், துலா ராசி. ஏழரைச்சனி முடிந்துவிட்டது. 2021 டிசம்பர்வரை ராகு தசை. சேட்டை, சுட்டித்தனம், கோபம், பிடிவாதம் எல்லாம் இருக்கும். ஆயுள், ஆரோக்கியம் கவலையில்லை. குரு தசை வந்த பிறகு 2021 முதல் படிப்பில் முன்னேற்றம் தெரியும். உங்கள் எதிர்காலம் இனிமையாக அமையலாம். வெளிநாடு போக ஒருமுறை சேலம்- மேட்டூர் பாதையில் நங்கவள்ளி சென்று லட்சுமிநரசிம்மருக்கு அபிஷேக பூஜை செய்யவும். தொடர்புக்கு, பாலாஜி, செல: 94435 15904, 94439 41014.

● ஜி. ஜானகிராமன், தூத்துக்குடி.

Advertisment

nஎனது மகன் சிவராம கிருஷ்ணனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. தற்சமயம் ஒரு லாட்ஜில் வேலை செய்கிறான். லாட்ஜ் வேலை என்று பெண் வீட்டார் தயங்குகிறார்கள். எப்போது திருமணம் நடக்கும்?

செவ்வாய்- சனி தோஷமும், நாகதோஷமும் இருப்பதால் சிவராமகிருஷ்ணனுக்கு திருமணம் தடைப்படுகிறது. லாட்ஜ் வேலை ஒரு காரணமல்ல! லாட்ஜில் வேலை செய்கிறவர்களுக்கெல்லாம் திருமணம் நடக்காமல் இருக்கிறதா? குழந்தை பிறக்காமல் இருக்கிறதா? மேற்படி தோஷம் இருந்தால் 40 வயதுவரை திருமணம் தள்ளிப் போகலாம். அல்லது 35 வயதில் காதல் திருமணம், கலப்புத்திருமணம் என்று தானாக வாழ்க்கையை அமைத்துக்கொள்வார். அதனால் சீக்கிரம் திருமணம் நடக்கவும், முறைப்படி சுய இனத்தில் திருமணம் நடக்கவும், இதைவிட நல்ல வேலை அமையவும், சம்பாத்தியம் பெருகவும், நீங்கள் பேரன், பேத்திகளைப் பார்க்குமளவு ஆரோக்கியமாகவும், ஆயுள் தீர்க்கமாக இருக்கவும் காரைக் குடி சுந்தரம் குருக்களிடம் 19 வகையான ஹோமம் செய்து குடும்பத்துடன் கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். செலவைப் பார்க்காமல் ஹோமம் செய்ய வும். தொடர்புக்கு செல்: 99942 74067.

● பி.ஆர். தங்கவேலு.

மகள் திருமணம் 18-2-2019-ல் வழிவிடு முருகன் கோவிலில் நடந்தது. 22-3-2019 நாளிதழில் வந்த செய்தியால் மனக் கஷ்டத்தை அடைந்தேன்.

Advertisment

உங்கள் கேள்வியே புரிய வில்லை. மேலும் மகள்- மருமகன் ஜாதகத்துடன் நேரில் வரவும். ஆலோசிப்போம்.

● இளவரசி, ஈரோடு.

எனக்கு 2008-ல் திருமண மானது. 2013 வரை என் கணவர் நல்ல முறையில் தான் இருந்தார். பிறகு வேறொரு திருமணமான பெண்ணுடன் தகாத உறவு கொண்டு என்னையும் என் மகனையும் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். சிறுவய திலேயே அம்மாவையும் தங்கையையும் இழந்து விட்டேன். அப்பாவும் வேறொரு பெண்ணுடன் சென்றுவிட்டார். இப்போது கணவரும் அதேநிலை. வெறுத்துப்போய் நானும் விஷம் குடித்து பையனுக்கும் விஷம் கொடுத்து கடைசியில் காப் பாற்றப்பட்டோம். ஒருமுறை தங்களிடம் என் நிலையை விளக்கிக் கேட்டதற்கு, அவர் (கணவர்) திருந்தவும் மாட்டார்; திரும்ப வரவும் மாட்டார் என்று பதில் தந்தீர்கள். அதைமீறி அவரைத்தேடிப் போய் அழைத்தும், அவர் என்னை அடித்து அசிங்கப்படுத்திவிட்டார். இதுவரை நானும் மகனும் தனியாகவே வாழ்ந்து விட்டோம். இப்போது நட்பாகப் பழகிய ஒருவர் எனக்கு வாழ்வுதர முன்வருகிறார். என்னிலும் அவர் வயது இளமை! இது சரி வருமா?

இளவரசிக்கு 37 வயது (2019 மே மாதம்) முடியும். அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, மீன லக்னம். 7-ல் சந்திரன், செவ்வாய், சனி சேர்க்கை. குரு தசை நடக்கிறது. குரு 8-ல் மறைவு. எனவே மணவாழ்க்கை ரணவாழ்க்கையாக அமைந்து விட்டது. மறுவாழ்வுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், 40-ஆம் நம்பர் வீட்டில், சிம்னி ஹோட்டலுக்கு எதிர்ப்புற வீதியில் சீதாராம் சுவாமி என்று ஒரு பிரம்மச்சாரி; சக்தி உபாசகர் இருக்கிறார். அவரைப்போய் சந்தித்து, உங்கள் கோரிக்கையை முறையிடுங்கள். அவர் ஏற்றுக்கொள்ளலாம் என்றால் புதுவாழ்வைத் தொடங்கலாம். வேண்டாம் என்றால் தனிமையாகவே இருந்துவிடலாம். அவர் செல்: 98433 11741. சனிக்கிழமை மௌனவிரதம் இருப்பார். அன்று போக வேண்டாம்.

● தங்கமணி, உளுந்தூர்பேட்டை.

பல அரிய விஷயங்களை அறிந்து கொள்ள "பாலஜோதிடம்' பயனுடையதாக இருக்கிறது. எனது மகன் விஸ்வநாத் ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி.

அவனுக்கு உத்திர நட்சத்திரம், கன்னி ராசி பெண் ஜாதகம் வந்துள்ளது. திருமணம் முடிக்கலாமா? குழந்தை பாக்கியம் இருக்காது என்று உள்ளூர் ஜோதிடர்கள் கூறுகிறார்கள். பெண்ணுக்கு ராகு தசை நடப்பு. இதைவிட வேறு நல்ல ஜாதகம் வரும். காத்திருக்கவும்.

● பகவதி சோமசுந்தரம், ஈரோடு.

எனது மகன் விஜய்க்கு எப்போது திருமணமாகும்? அவன் ஜாதகப்படி தோஷம் உண்டா? எனது கணவர் சோமசுந்தரத்துக்கு ஆரோக்கியம், எதிர்காலம் எப்படியிருக்கும்? எனது ஜாதகப்படி எனது ஆயுள் பலம், மாங்கல்ய பலம் எப்படி உள்ளது? அப்பாவழி சொத்து கிடைக்குமா? எப்போது கிடைக்கும்? கடன் எப்போது தீரும்?

பகவதிக்கு கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். 45 வயது. மேஷ லக்னம். லக்னத்தில் குரு இருக்க, செவ்வாய் குருவைப் பார்க்கிறார். குரு 5-ஆம் இடம், 7-ஆம் இடம், 9-ஆம் இடங்களைப் பார்க்கிறார். 47 வயதுவரை புதன் தசை. பிறகு ஏழு வருடம் கேது தசை. (54-க்குமேல் சுக்கிர தசை யோக தசை). ஆயுள் தீர்க்கம், மாங்கல்யம் தீர்க்கம். சுக்கிர தசையில் 55 வயதில் அப்பாவழி சொத்து கிடைக்கும். மகன் விஜய் விருச்சிக லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். 28 வயது நடக்கிறது. நாகதோஷம், சனி தோஷம், செவ்வாய் தோஷம் இருப்பதால் 30 வயதில் திருமணம் கூடும். ராமலிங்கம் பூரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, சிம்ம லக்னம். 58 வயது நடப்பு. சுக்கிர தசை 66 வயது வரை நடக்கும். குடும்பத்தில் மூவரும் ஒரே நட்சத்திரம். எனவே பரிகார ஹோமம் செய்துகொள்வது அவசியம். காரைக்குடி சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு (செல்: 99942 74067) ஹோமம் செய்து, மூவரும் கலச அபிஷேகம் செய்துகொள்ளவும். விஜய் திருமணம்- மற்றவர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம், வாழ்க்கை முன்னேற்றம், வசதி வாய்ப்பு போன்ற எல்லா யோகங்களும் வந்தடையும்.

● கே. கலைமன்னன், சிதம்பரம்.

நான் எம்.ஏ.பி.எட்., படித்துள்ளேன். இதுவரை வேலை இல்லை. மனைவி மணிமேகலை பூச நட்சத்திரம், கடக ராசி, மேஷ லக்னம். இதுவரை எங்களுக்கு குழந்தையும் இல்லை. என் பெயரை K. RAMANICH SELVAM என்று மாற்றியுள்ளேன். முன்னேற வழிகூறவும்.

உங்கள் திருமணத் தேதி 4, 5, 7, 8 என்றால் வாரிசு தோஷம் வரும். பெயர் மாற்றம் செய்யவும். எதிர்காலம், வேலை, சம்பாத்தியம், வாரிசு யோகத்துக்கும் முன்பதிவு செய்துவிட்டு நேரில் வந்து சந்திக்கவும்.

● பி. நாராயணமூர்த்தி, சென்னை-5.

என் தங்கை மகன் குபேருக்கு எப்போது திருமணம் நடைபெறும்?

குபேர் 42 வயது. சதய நட்சத்திரம், கும்ப ராசி, கும்ப லக்னம். 7-ல் சனி. ராசியை- லக்னத்தை நீச்ச செவ்வாய் (கடகச் செவ்வாய்) பார்க்கிறார். சுக்கிரனை கடகச்செவ்வாயும், சிம்மச்சனியும் பார்க்கிறார்கள். திருமணம் கேள்விக்குறிதான். திருமணமாகிப் பிரிந்த பெண் (மறுமணமாக) முடியலாம். அட்டமாதிபதி புதன் தசை நடக்கிறது. நாகதோஷமும் உண்டு. ஆகவே காரைக்குடியில் சுந்தரம் குருக்களிடம் காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும், சூலினிதுர்க்கா ஹோமமும், இன்னும் பல ஹோமம் (19 ஹோமம்) செய்து குபேருக்கு கலசஅபிஷேகமும் செய்ய வேண்டும். (செல்: 99942 74067)-ல் தொடர்புகொள்ளவும்.